Latest News
பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன?அதானி குழுமத்தில் செய்த முதலீட்டின் பலன் என்ன? எல்.ஐ.சி. விளக்கம்கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சாதி இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க. நிர்வாகி கைது7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண்: இவ்வளவு பால் சுரக்குமா?ஹிண்டன்பர்க் அறிக்கை விளைவு: அதானி குழும பங்குகள் மூன்றாவது நாளாக சரிவுஅம்ரித் உதயான் ஆக மாறிய முகல் தோட்டம் - இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்கள் காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும் செயலாகும் - ஓபிஎஸ்மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு தினம்: தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது - பிரதமர் மோடி அஞ்சலிஒடிசாவில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழப்பு

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை நீடித்து வருகிறது: சென்னை வானிலை மையம் தகவல்

0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில்  15 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை கிண்டி, திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்து வருகிறது. அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கும் மேல் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை நகர் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை எம்.சி.ஆர்.நகர், பட்டினபாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.