Latest News
7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண்: இவ்வளவு பால் சுரக்குமா?ஹிண்டன்பர்க் அறிக்கை விளைவு: அதானி குழும பங்குகள் மூன்றாவது நாளாக சரிவுஅம்ரித் உதயான் ஆக மாறிய முகல் தோட்டம் - இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்கள் காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும் செயலாகும் - ஓபிஎஸ்மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு தினம்: தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது - பிரதமர் மோடி அஞ்சலிஒடிசாவில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழப்புபிபிசி ஆவண படம், அதானி பங்குச்சந்தை மோசடி, நீட் விலக்கு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவுஇந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும்: வானிலை மையம்இரட்டை இலை சின்னத்திற்காக கையெழுத்திடும் அதிகாரம் ஓபிஎஸ்-க்கு மட்டுமே இருக்கிறது- மனோஜ் பாண்டியன்

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

0

அகமதாபாத்: குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், கிராமபுறங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. நேற்று அதிகாலை பொடாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் சுற்றியுள்ள உள்ள கிராமங்களில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் பாவ்நகர், பொடாட் மற்றும் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அனைவரும் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்திருப்பது தெரிந்தது. மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 36 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக குஜராத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மதுவிலக்கு மற்றும் கலால் துறை இயக்குனர், குஜராத் தடய அறிவியல் ஆய்வக இயக்குனர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்ட குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது.

குஜராத் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா நேற்று அளித்த பேட்டியில், ‘பொடாட்டின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண் உட்பட சிறு சிறு கொள்ளையர்கள் சிலர், அதிக விஷத்தன்மை கொண்ட மெத்தில் ஆல்கஹாலை தண்ணீரில் கலந்து போலி மதுபானத்தை தயாரித்து, ஒரு பாக்கெட் ரூ.20 என்று விற்றுள்ளனர். அதை வாங்கி குடித்தவர்களே உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தத்தில் மெத்தனால் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் 25 பேர் பொடாட் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். 11 பேர் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்கள். ஜெயேஷ் (எ) ராஜூ என்பவர், தான் மேலாளராக பணிபுரிந்த  அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மெத்தில் ஆல்கஹாலை திருடி, அதை பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25ம் தேதி விற்றுள்ளார். இதை போடாட்டின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சமூக விரோதிகளுக்கு சஞ்சய் விற்றுள்ளார். அவர்கள் அந்த ரசாயனத்தில் தண்ணீர் கலந்து விற்றுள்ளனர்,’ என்று தெரிவித்தார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.